Saturday, November 18, 2017

நம்முடைய கோவில்கள்-5

சில நாட்களுக்குமுன்பு  திருவரங்கன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஸ்ரீபாஷ்யக்காரர் சந்நிதிக்கும் சென்றோம்.  சந்நிதிக்கு ஏதிரில்  ஒரு பாகவ தோத்தமர்  சில பாசுரங்கள் சேவித்து அதற்கு வ்யாக்யானமும்  சொல்லிக்கொண்டிருந்தார். பக்தர்களும் மிக பக்தியுடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இதை  பார்த்து எனக்கு சில எண்ணங்கள் தோன்றின.
1. பரந்து விரிந்து கிடக்கும்  மண்டபங்கள், பிரகாரங்கள் சிலமணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் உப்யோகப்படுத்தப்படுவதில்லை  .
2. சுமார் காலை 11 மணிக்கு மூடப்படும் கோவில் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகின்றன.
3.மண்டபங்கள் , பிரகாரங்களை சமூகத்தின் ஆன்மீக காரியங்களுக்காக பயன்படுத்தலாம்
4. காலை ,பிற்பகல், மாலை நேரங்களில் ஆன்மிக பாசுரங்கள், தேவார, வழிபாடு பற்றிய வகுப்புக்கள் நடத்தலாம்.
5. ஆன்றோர்கள்,சான்றோர்கள் ஆன்மிக உறை யாற்றலாம்.
6. உபன்யாசங்கள் தனியார் கல்யாண மண்டபங்களிருந்து கோவில் மண்டபங்களை நோக்கி வரலாமே.
7.தமிழ் மற்றும் சமஸ்க்ரித வகுப்புக்கள் நடத்தலாம்  இரண்டு மொழிகளும் ஆன்மீகத்தின் இரு கண்கள்.
8.கோவில் இருக்கும் ஊர், கோவில்கொண்டிருக்கும் ஆண்டவன் பற்றிய
வரலாற்று காட்சியகங்களை ஏற்படுத்தலாம் .
9. கோவில்கள் சரியான முரையில் உபயோகப்படுத்தப்பட்டால் நல்ல சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.

இன்னும்  எவ்வளவோ !

Monday, October 23, 2017

நம்முடைய கோயில்கள் -4

மூன்றாம் பகுதியின் தொடர்பாக  மேலும் சில  சிந்தனைகள் :

1. இக்கலியுகத்தில் எவ்வளவோ  பிரச்சினைகள், கஷ்டங்கள் ,  இடர்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் , நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றவும் கடவுளின் உதவியை நாடி அங்கு செல்கின்றோம்.
எவ்வளவுபேர்  <அய்யனே/தாயே   உன்மீது அளவில்லாத பக்தியைக்கொடு > என்று  மனமுருகி நிற்கின்றோம் ? 
2. பக்தியைமட்டும் கேட்டு வாருங்கள். மற்றவைகளை அவனே தீர்த்து  வைப்பான், உங்கள்முயற்சியுடன்.
3.செல்லும் கோவிலைப்பற்றிய ஸ்தல புராண  புத்தகங்கள் வாங்கிப்படியுங்கள்.   விவரங்களை  நம்முடைய  சரித்திரத்துடன்  ஒப்பிட்டு பாருங்கள்.
4.கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள்,  ஓவியங்கள் ஆகியவற்றை ரசியுங்கள். அவைகள் நம்முடைய   பாரம்பர்யம் எப்படிப்பட்டது எனபதை
பறைசாற்றும்.

தொடரும் 

Wednesday, October 11, 2017

நம்முடைய கோயில்கள்-2



கோவில்கள் பராமரிப்புக்கு நாம் செய்யககூடியவை :
1. பொருளுதவி   2. மற்றவர்கள் செய்யும் காரியங்களில் பங்கு கொள்ளுதல்
3. கோவில்களை தூய்மையாக  வைத்துக்  கொள்வதில்    கவனம் செலுத்துதல் .
முதல் இரண்டும் மற்றவர்களை சான்றிருக்கின்றன.
மூன்றாவது தனிப்பட்ட முறையில்  நாம் செய்யக்கூடியது  என்ன?

1. தூய்மையான உள்ளம் ,உடல்,உடையில்  செல்வது:
    இந்த நிலையில் உங்கள்  உள்ளம் தானாகவே  அசுத்தத்தை  வெறுக்கும். 
2. மறக்காமல் சுத்தமான   ஒரு சிறிய துண்டு
    கைகளை துடைக்க கோவில் சுவர்களை தூண்களை  நாடாமல்  இருக்க              உதவும்
3. மறக்காமல் வேண்டிய குடி நீர்
   முக்கியமாக வரிசையில் நிற்கும்பொழுது தேவை 
4. ஒரு சிறிய காலி பை  ( பிளாஸ்டிக் பை  இல்லை)
    தேவையற்ற காகிதம் முதலியவைகளை கோவில் உட்புறங்களில்                          போடாமல் இந்த பையில் போட்டு வையுங்கள். வெளியில் சென்ற பிறகு           குப்பை தொட்டியில் சேர்த்து  விடுங்கள்.
5. ஒரு தட்டு  பூஜை சாமான்களுக்காக
    பிளாஸ்டிக் பை  உபயோகிக்காதீர்கள்.
6. சிறுவர்களுடன் செல்லும்பொழுது தேவையான wiping paper
    உங்களுக்கும் இது  மிகவும் தேவை
7.ஒரு சிறிய கிண்ணம்
   ப்ரசாதங்கள் வாங்கிக்கொள்ள . கோவிலுக்குள் சாப்பிட  வேண்டாம்              8. அர்ச்சனைக்காக  பெயர்,நக்ஷத்ரம், கோத்ரம்  குறிப்புகள்
   அர்ச்சகரின் நேரத்தைக்குறைக்கும் . இந்த குறிப்புகளை நீங்கள் மனதில்           வாங்கிக்கொண்டு அர்ச்சகர்மூலம்  அங்கு எழுந்தருளியிருக்கும்                             தெய்வத்தின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்.
9. கோவிலில் தேங்காய் உடைப்பது அல்லது சந்நிதியில் அர்ச்சகர்                              மூலம் தேங்காய் உடைப்பது தேவை இல்லாத  ஒன்று என்பது                                   அடியேனுடைய அபிப்ராயம். வேண்டுதல் அப்படி என்றால் தேங்காயை 
    இல்லங்களில் உடைத்துக்கொண்டுவந்து கோவிலில் சமர்ப்பியுங்கள்.
10.தயவு செய்து கோவிலில் விளக்கு ஏற்றி அங்கேயே வைப்பதை                                தவிர்க்கவேண்டும்.  கோயிலில் எண்ணெய்ப்பசை தங்குவதை                                விரும்பாதீர்கள். உங்கள் வேண்டுதல் அப்படியாக இருந்தால் தங்கள்                   இல்லங்களிருந்து சுத்தமான விளக்கு ,நெய் , திரி  கொண்டுவந்து விள                 க்கேற்றி , திருப்பி எடுத்து செல்லுங்கள்.

இன்னும் எவ்வளவோ உங்கள் மனதிலும் இருக்கலாம். அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.

மேற்கண்டவை சில என்னுடைய அபிப்ராயமாக  இருந்தாலும் , பலவற்றை சில உபன்யாசகர்கள் சொல்லக்கேட்டு இங்கு பதித்திருக்கிறேன்.

தொடரும்


Monday, October 02, 2017

nammudaya kovilkal--1

நம் கோவில்கள் மிகவும் விஸ்தாரமானவை . மனம் கொள்ளோக்கொள்ளும்  சிற்பங்களுடையவை.  கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு . நகரங்கள்  அமைப்புக்கு கோவில்கள் முன்னோடிகள். அவை இருக்கும் இடங்கள் இயற்கை மணம் சூழ்ந்தவை  எக்காலத்தில் கட்டப்பட்டன,  யாரால் புனர் உத்தாரணம் செய்யப்பட்டன , யாரால் இடிக்கப்பட்டன, பின்னர் எழுப்பப்பட்டன  என்பவைகளை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து  கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை
மனம் வாக்கு,காயம் என்ற ஐம்புலன்களை அடக்கி, மனதை நிலைநிறுத்தி முக்தி அடைய வேண்டும் என்று நினைக்கும் நம் ஓவ்வொருவருக்கும்  புகலிடம் கோவில்கள்.  இவைகளின் பெருமைகளை இன்னும் எவ்வளவோ அவரவர்களின் திறமைக்கேற்ப அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

வெறும் கட்டிடங்களுக்கே இவ்வளவு பெருமை என்றால் உள்ளே இருக்கும் மூர்த்திகளுக்குள்ள பெருமைகளை சொல்ல நமக்கு ஒரு பிறவி போதுமோ ?

இப்படி பெருமை வாய்ந்த கோவில்களை பராமரிப்பது நம்முடைய கடமைகளின் ஒன்று என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அனால் யார் செய்வது?. பல செல்வந்தர்கள், அரசாங்கம், மடங்கள் ,ஆதீனங்கள் என்று பலதரபின்னரும்  முயன்று வருகின்றனர் .

அனால் தனிப்பட்ட ஒவ்வொருடைய பங்காளிப்பும்  எப்படி இருக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.