Wednesday, October 26, 2011

Deepavali-2011

அனைவருக்கும் ஸௌம்யம் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்.

இந்த பண்டிகை இரண்டு விதமாக கொண்டாடப்படுகிறது.

தெற்கில் இது நரகாசுர வதமாகவும், வட பாகத்தில் ராமர் வன வாச மற்றும் 
ராவண வதம் முடித்து  சீதா பிராட்டியை மீட்டு , அயோத்தி திரும்பும் திரு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.  
வடபாகத்தில்இப்பண்டிகை தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகைபோல் 
கொண்டாடப்படுகிறது.

முதல் நாள்: பழைய பாத்திரங்களை போட்டு புதிதாக பாத்திரங்கள் வாங்குவது
இரண்டாவது நாள் : மாலையில் சாயங்கால வேளையில்  வரிசையாக 
                                         தீபங்கள் ஏற்றி (கார்த்திகை போல்) மற்றும்   
                                         லக்ஷ்மி பூஜை .
மூன்றாவது நாள்:   சஹோதரர்களுக்காக வேண்டிக்கொள்ளும் கணுப்பண்டிகை 
                                        போல் பாயிதூஜ்.        
நான்காவது நாள்:   கோ பூஜை. நம்மூர் மாட்டுப் பொங்கல்  போல்     
                                       கொண்டாடப்படுகிறது.

தீபாவளி  வாழ்த்துக்கள்.