Friday, September 09, 2011

Birthday-நன்றி: ஒரு இமெயிலில் இருநது-Brahmin Association


சில மாதங்களில், ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகிறது. அந்த மாதத்தில் பிறந்த நாள் வரும் நிலையில், ஜன்ம நட்சத்திரமாக எதை எடுத்துக் கொள்வது?
எஸ்.திருமலை, மதுரை-7

இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வது சிறப்பு. சாஸ்திரமும் அதை ஏற்கும். நட்சத்திர மாதம் 27 நாட்களில் முடிவடையும். நாம் ஸெளரமானத்தை ஏற்கிறோம். ஒரு ராசியில் சூரியன் நுழைந்து மறு ராசியில் காலெடுத்து வைக்கும் நாள் வரை கணக்கிட்டு, ஒரு மாதமாக ஏற்கிறோம். இதன்படி, மாதங்களில் 29 நாளிலிருந்து 32 நாள் வரை வித்தியாசம் காணப்படுவதுண்டு (அதாவது, ஒரு மாதத்தில் 29 நாட்கள் வரும்; இன்னொரு மாதத்தில் 32 நாட்கள் இடம்பெறும்).
நாட்களின் அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட, 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஸெளரமானம், நட்சத்திரமானம், ஸாவனம் - ஆகிய மூன்று அளவையில் இருக்கும் மாதங்களை... செய்யும் சடங்குக்கு ஏற்ப, பொருத்தமானதை தேர்ந்தெடுப் போம். உதாரணத்துக்கு... மகப்பேறு மாதத்தைக் கணக்கிடும்போது, நட்சத்திர மாதத்தை ஏற்போம். அங்கு ஸெளரமானமோ, ஸாவனமோ பொருந்தாது. ஸெளரம் 29-ல் இருந்து 32 வரை இருப்பதும், ஸாவனம் 30 நாளாக இருப்பதும் கணக்கிடுவதற்கு இடையூறாக இருக்கும். ஆகவே, அதற்கு நட்சத்திர மாதம்தான் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.
27 X 10 =  270 நாட்கள் தாண்டினால் மகப்பேறு நடைபெறுவது உண்டு. பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்கிற கோட்பாடு, நட்சத்திரமானத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஸெளரமானாலும் ஸாவனமானாலும் 30X10 = 300; 31X10 = 310 என்று தெளிவில்லாத காலத்தைக் குறிப்பிடும்.
ஓர் அயனம்- 6 மாதங்கள் (30 நாள் கொண்டது), ஒரு பருவ காலம், 2 மாதங் கள் ( அதாவது 60 நாள்கள்), ஒரு மாதம் (30 நாட்கள்), ஒரு பஷம் (15 நாள்), ஒரு நாள், ஒரு முகூர்த்தம் ஆகியவற்றைக் கூட்டினால்... அதாவது, 6 2 1 அரை மாதம் ஒரு நாள் மூன்றரை நாழிகை ஆகியவற்றைச் சேர்த்தால்...  9 மாதம், 16 நாள், 1 மணி, 24 நிமிடம் கழிந்தால்... குழந்தை வெளிவர ஆயத்தமாகிவிடும் என்று ஜோதிடம் தகவல் அளிக்கும் (அயனக்ஷணமாஸ...). 270 நாட்கள் நட்சத்திர மாதம்.அதையும் தாண்டும் மகப்பேறு, 300 நாட்களுக்கு முன்பே நிகழ்ந்துவிடும். இங்கு ஸெளரமோ நட்சத்திரமானமோ பொருந்தாது ஸாவனம்தான் பொருந்தும் என்பது கண்கூடு. அதுபோல், ஸெளரத்தை அளவுகோலாக வைத்து பிறந்த நாளைக் குறிப்பிடும் முறையை நாம் பின்பற்றுவதால், 2-வதாக வரும் நட்சத்திர நாள், முழு வருஷம் வந்து விட்டது என்பதை ஏற்கும் வகையில் பொருத்தமாக இருக்கும். முதலில் வரும் நட்சத்திரத்தை ஏற்றால், நாட்களின் அடிப்படையில் வருஷம் முடியாமலும் இருக் கும். ஆகவே, 2-வதாக வரும் நட்சத்திரத்தை ஏற்பது சிறப்பு.



Gowrishankar
आनो भद्रा: क्रतवो यन्तु विश्वत:
Let Noble Thoughts Flow from Everywhere
Sent from my iPad

No comments: