ஸ்ரீ ராம நவமி -சிந்தனை துளிகள்.
இன்று ஸ்ரீராம நவமி. மிகவும் போற்றுதற் குரிய மஹா புருஷன் அவதரித்த நாள். உலகெங்கிலும் இவருடைய பெயர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்தே பரவி இருந்திருக்கிறது. உலகெங்கிலும் பல நாட்டு மன்னர்கள் இவருடைய பெயரை வைத்துக்கொண்டிருந்தனர். இவரைப்பற்றிய் ராமாயண காவியங்கள் ஏராளம் அவருடைய வாழ்க்கையில் ஏராள சம்பவங்கள். சாதித்தவை ஏராளம். அப்படியென்ன பெருமை அவரிடம் இருந்தது?
ஒன்றே ஒன்றை மட்டும் , சிறு துளியாக , உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த சம்பவம் ஸ்ரீ ம்காபாரதததில் வருகிறது.
அபிமன்யு மிகவும் கொடூரமாக கொலை செயயப்பட்ட துக்கத்தில் அனைவரும் உள்ளனர். அவர்களுடைய துக்கத்திலிருநது மீட்க நாரதர் இப்படிச்சொல்கிறார்:
எல்லோருக்கும் பிறப்பு எப்படியோ அப்படியே இறப்பும். யாரும் விதிவிலக்கல்ல. ராமன் எப்படிப்பட்டவர் அவருக்கே இறப்பு ஏற்ப்பட்டது.
எப்படிப்பட்டவர்?
6 அடிக்குமேல் உயரம். கருத்த.மேனி. பறந்து விரிந்த மார்பு. கருணை, வீரம்,
அழகு கொண்ட கண்கள். திடகாத்திரமான உருவம்.
நாட்டை ஆண்ட வருடங்கள் 10000
அவருடைய மக்களின் சராசரி வயது 1000
அவருடைய ஆட்சியில் விதவைகள் இல்லை.
சிறு வயதுக்காரர்கள் இறந்து பெரியவர்கள் காரியங்கள் செய்யும் நிலை இல்லை.
எல்லோரிடத்திலும் எல்லா செல்வங்களும் இருந்தன.
எவரும் மற்றவர் சொத்திற்கு ஆசைப்படவில்லை.
யாருடைய மனத்திலும் இது தேவை, அது தேவை என்ற அதிகப்படியான
எண்ணமே இல்லை.
கொலை, கொள்ளை என்ற குற்றங்க்கள் இல்லவே இல்லை.
பயம் என்பதே இல்லை.
ஒரு இளம் வயது பெண் சகல ஆபரணங்களுடன் தனியாக யாருடைய
துணையும் இன்றி இமயம் முதல் குமரி வரை இரவு பகல் என்று எந்த நேரத்திலும் பிரயாணம் செய்யலாம்.
ஈ, கொசு போன்ற தொல்லைகள் இல்லை. ஆகவே எல்லா மக்களும் ஆரோக்யமாக இருந்தனர்.
சோகம் என்பதே இல்லை.
இப்படிப்பக்ட்ட ராமருக்கே சரயு நதியில் மூழ்கி இறப்பு நேர்ந்தது.
ஆகவே , பாண்டவர்களே, துக்கத்திலிரிந்து விடுபட்டு உங்களுடைய கடமையில் கவனம் செலுத்துங்கள் .
இப்படி செல்கிறது பாரதம்.
ஆகவே மேற்கண்டவைதான் ராமராஜ்யத்தின் ஒரு துளி.
இதுதான் வேண்டும் என்று காந்திஜி முதற்கொண்டு நம்முடைய சுதந்திர
வீரர்கள் கண்ட கனவு.
இன்று நாம், நம்முடைய நாடு எப்படி ??????