Sunday, February 13, 2011

ஆன்மா

நெய் பாலுக்குள் இருக்கிறது.
ஆநால் அது   நம் கண்களுக்கு தெரிவதில்லை.
பாலை பாலாக வைத்திருந்தால் அது ஒரு நாளில் கெட்டுவிடுகிறது.
பாலைக் காய்ச்சி  சற்று  உறை ஊற்றி  வைத்தால்  மறுநாள்  அது  தயிராகிறது.
இதே  தயிரைக் கடைந்து  மோரும் வெண்ணையுமாய் பிரித்துவிட்டால்,  அதே  பால்
அதற்கு  அடுத்த  நாளும் தன்  நிலைகள் மாறி  வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஒரு வாரத்திற்குள் இவை  கெட்டு விடுகின்றன.
வெண்ணையை  நெய்யாக்கினால், அதன் இயல்பின் படி, நெய் உலகம் உள்ளளவும் அழிவதில்லை.

ஆக ஒரே நாளில் கெட்டுப் போகக்கூடிய பாலுக்குள்ளே  உலகம் அழியும் வரை கெடாமல்
இருக்கும் நெய்  மறைந்திருக்கிறது.

இதன் கருத்தாக்கம், அழியக்கூடிய  உடலுக்குள்  அழிவற்ற ஆன்மா  இருக்கிறது.
அந்த ஆன்மாவே,  தான்,   என்று யார் ஒருவன் உணர்கின்றானோ, அவன்  அழிவற்ற 
நிலை  அடைகிறான்.  அவனுக்கு மரணம் என்பதே இல்லை. 
நான் என்பது எப்பொழுதும் நான் இல்லை,  எனது எண்ணம் ஒன்றே  நானாக இருக்கிறது , என்று
கூறுகிறது ஒரு ஹிந்து  தத்துவம்.
மனித ஆத்மாவே  கடவுள் என்கிறது மற்றொரு  ஹிந்து  தத்துவம்.
ஆக, ஒவ்வொரு தனி மனிதனும்  கடவுளை தன்னுள் கொண்டுள்ளான் என்பதே இதன் கூற்று.

இவ்விதமாய்  நீங்களும்  நானும் எல்லோரும்  கடவுள் ஆகிறோம்.

நன்றி:  ஒரு இ மெயிலில் இருநது